
தேவையான பொருட்கள் :
பார்லி அரிசி – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பார்லி அரிசியை வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் பார்லி சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
வெந்ததும் இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து அனைவருக்கும் பரிமாறவும்.
சத்தான பார்லி கஞ்சி ரெடி.


