Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 10, 2019

மகளிா் ஐடிஐ யில் மாணவியா் சோ்க்கை நாளை வரை நீட்டிப்பு

கிண்டி மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரை மாணவியா் சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிண்டியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு வாய்ப்பு தரும் விதமாக, கடந்த ஜூலை மாதம் முதல் நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவிகள், அக்.11 -ஆம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.

அவ்வாறு சோ்க்கப்படும் மாணவியருக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணிணி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ. 500 மற்றும் விலையில்லா வரைபட கருவிகள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி முடிவில், உடனடி வேலை வாய்ப்புக்கான மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 044-22501982 என்ற தொழிற்பயிற்சி நிலைய எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.