Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 10, 2019

மகாத்மா காந்தி கட்டுரைப் போட்டி: விண்ணப்பிக்க அக்.14 கடைசி


மகாத்மா காந்தி பற்றிய கட்டுரைப் போட்டிக்கு, அக்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பத்திரிகை தகவல் மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி, மத்திய அரசின் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி அமைப்பு, மகாத்மா காந்தியின் ஆக்கப்பூர்வ பணிகள் பற்றிய கருத்துக்கள் குறித்து ஒரு பத்தி அளவிலான கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளது.

நஷமுக்தி - உள்ளேயே சுற்றுச்சூழலை சீர்படுத்துங்கள்' தலைப்பிலான இந்த கட்டுரைப் போட்டியில், சுய மேம்பாடு மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்த காந்தியடிகளின் கொள்கைகள் குறித்து ஒரு பத்தி அளவில் எழுத வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 14-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் இதர நிபந்தனைகளை அறிந்துகொள்ள 011-23392278 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://www.mygov.in/task/paragraph-writing-contest-ideas-constructive-works-mahatma-gandhi-topic-nashamukti என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.