Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 6, 2020

தேர்வில்லை, நேர்காணல் இல்லை, 10-வது தேர்ச்சிபெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை



மத்திய அரசிற்கு உட்பட்ட துப்பாக்கித் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கித் தொழிற்சாலையில் (Ordnance Factory) காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான தகுதிகள், வயது வரம்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.OFB Recruitment 2020
நிர்வாகம்




மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பாதுகாப்புத் துறையின் ஆளுமைக்கு உட்பட்டது துப்பாக்கித் தொழிற்சாலை. இங்கு தான் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

OFB Recruitment 2020
கல்வித்தகுதி:

மேற்கண்ட துறையில் Non - ITI மற்றும் ITI என இரண்டு பிரிவுகளாக பணியிடங்கள் உள்ளது. இவற்றில், Non ITI பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணிதம், அறிவியல் பாடத்தில் 40 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ITI Category பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ ஆகிய இரண்டிலும் 50 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.




OFB Recruitment 2020
வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 09.02.2020 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர் 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் UR பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

OFB Recruitment 2020
தேர்வு முறை:

விண்ணப்பதாரர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வுகள் எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களில் மெரிட் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு தொழிற்சாலை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

OFB Recruitment 2020
விண்ணப்பிக்கும் முறை:




விண்ணப்பப்பதிவு ஜனவரி 10 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ofb.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக அறிவிப்பு லிங்க்கை காண இங்கே கிளிக் செய்யவும்.


OFB Recruitment 2020
விண்ணப்பக் கட்டணம்:

OFB Recruitment 2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.




OFB Recruitment 2020
OFB Recruitment 2020 முக்கிய நாட்கள்:-
OFB Recruitment 2020 அறிவிப்பு வெளியான நாள் : 31 டிசம்பர் 2019
OFB Recruitment 2020 விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 10 ஜனவரி 2020
OFB Recruitment 2020 பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 9 பிப்ரவரி 2020