Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 6, 2020

8-வது முடித்திருந்தால் வேலைவாய்ப்பு அறிவிப்பு



தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வழக்காடல் துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 15




பணியிடங்கள் : சென்னை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும், பிசி, எம்எம்சி பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு தலைமை வழக்குரைஞர், அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 27.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tn.gov.in என்னும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.