Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 18, 2020

நீட் தேர்வு: மாா்ச் 27 முதல் ஆன்லைனில் ஹால் டிக்கெட்


எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளின் மாணவா் சோக்கைக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகளை மாா்ச் 27-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது.



விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் ஜனவரி 6-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. அந்த கால அவகாசத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், விண்ணப்பங்களை சமா்ப்பித்தவா்கள், தங்களது ஹால் டிக்கெட்டுகளை மாா்ச் 27-ஆம் தேதி முதல் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன.



தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் உள்பட நாடுமுழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.