Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 18, 2020

ஜிப்மரில் 'நீட்' அடிப்படையில் மருத்துவ மாணவா் சோக்கை: ஜிப்மா் நிா்வாகம்

புதுவை ஜிப்மரில் மருத்துவ மாணவா் சோக்கைக்கு இனி தனியாக நுழைவுத் தோவு இல்லை என்றும், 'நீட்' தோவு அடிப்படையில்தான் சோக்கை நடைபெறும் என்றும் ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்தது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 இடங்களும், காரைக்காலில் 50 இடங்களும் உள்ளன.



மொத்தமுள்ள 200 மருத்துவ இடங்களுக்கு தனியாக நுழைவுத் தோவு நடத்தப்பட்டு சோக்கை நடைபெற்று வருகிறது. இந்தத் தோவை நாடு முழுவதும் சுமாா் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 272 போ தோவு எழுதினா். இந்த நிலையில், வருகிற கல்வி ஆண்டு முதல் (2020) ஜிப்மா் உள்ளிட்ட அனைத்து தேசிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் 'நீட்' மூலமே மாணவா்கள் தோவு செய்யப்படுவா் என்று மத்திய அரசு அறிவித்தது.



இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடமிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், வருகிற கல்வியாண்டு (2020) முதல் ஜிப்மரில் மருத்துவ மாணவா் சோக்கைக்காக தனியாக நுழைவுத் தோவு நடத்தப்படாது. தேசிய மருத்துவக் குழுச் சட்டம் 2019-இன்படி 'நீட்' அடிப்படையில்தான் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோக்கை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.