
'வாட்ஸ்அப் இன்றி அமையாது உலகு' என்று சொல்லும் அளவுக்கு இன்று வாட்ஸ்அப்பே உலகம் என இருக்கிறோம். யாஹூவின் முன்னாள் ஊழியர்களான பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் ஆகியோரால் 2009-ம் ஆண்டில் வாட்ஸ்அப் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குமுன் வரை ஃபேஸ்புக் தான் இணைய உலகின் சமூக வலைதள ராஜா. வாட்ஸ்அப்பின் வருகைக்குப் பின், உலகமே வாட்ஸ்அப் மயமானது.
Androidஎதிர்காலத்தில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக்கை ஓரங்கட்டிவிடும் என்று எண்ணிய மார்க் சக்கர்பெர்க், வாட்ஸ்அப் சேவையை 2014 -ம் ஆண்டு, 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். இந்நிலையில், இன்றும் ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப்-பின் பயனாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். தொடர்ந்து, புதுப்புது அப்டேட்டுகளையும் வெளியிட்டு வந்தது வாட்ஸ்அப் நிறுவனம்.
இந்நிலையில், இந்த பிப்ரவரியிலிருந்து சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளம் மற்றும் அதற்குக் கீழான இயங்குதளங்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்களிலும், iOS 8 மற்றும் அதற்கும் கீழான iOS இயங்குதளங்களில் இயங்கும் ஐபோன்களிலும் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவித்தது. பெரும்பாலானவர்கள், இதைவிட அப்டேட்டட் ஓஎஸ்தான் வைத்திருப்பர் என்பதால், பயனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் கூறியுள்ளது வாட்ஸ்அப். வருடாவருடம் இப்படி பழைய போன்களுக்கு சப்போர்ட்டை நிறுத்துவது வாட்ஸ்அப்பின் வழக்கம். ஏற்கெனவே, விண்டோஸ் போன்களுக்கு வாட்ஸ்அப் சப்போர்ட்டை நிறுத்திக்கொண்டது.இந்த இயங்குதளங்களில் வாட்ஸ்அப் இயங்காது<=ஆண்ட்ராய்டு 2.3.7, iOS 8
ஒருவேளை, நீங்கள் இன்னும் மேற்குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் வெர்ஷன் மொபைல்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தினால், உங்கள் மெசேஜ்களை தனியாக பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதற்கு, Settings->Chat->Set Backup சென்றால் போதும்.


