Breaking

Tuesday, February 18, 2020

எல்லை பாதுகாப்புப் படையில் வேலை!



எல்லைப் பாதுகாப்புப் படையில் (Border Security Force, BSF) காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆய்வாளர், கான்ஸ்டபிள், மெக்கானிக், எலெக்டரீசியன் உள்ளிட்டு மொத்தம் 317 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force, BSF)




மொத்த காலிப் பணியிடம் : 317

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள் :
SI (Master) - 5
துணை ஆய்லாளர் (Engine Driver) - 9
துணை ஆய்வாளர் (Workshop) - 3
HC (Master) - 56
HC (இன்ஜின் டிரைவர்) - 6
மெக்கானிக் (டீசல் / பெட்ரோல் இன்ஜின்) - 7
எலெக்ட்ரீசியன் - 2
ஏசி எலெக்ட்ரீசியன் - 2
எலெக்ட்ரானிக்ஸ் - 1
மெஷினிஸ்ட் - 1
கார்பெண்டர் - 1
பிளம்பர் - 2
CT (Crew) - 160




கல்வித் தகுதி:

எஸ்ஐ (மாஸ்டர்) பணிக்கு மொத்தம் 5 காலிப் பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடத்திற்கு லெவல் 6-ன் படி ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் சர்டிபிக்கெட் வைத்திருக்க வேண்டும். 22 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.




இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bsf.gov.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.