Breaking

Wednesday, March 25, 2020

'10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக'...தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி!



கொரோனா வைரஸ் பாதிப்பால் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்பதால் பாடங்களை நினைவுபடுத்தும் விதமாகவும் பாடங்களை திருப்புதல் செய்யும் விதமாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிப்பரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.



10 ஆம் வகுப்பின் அனைத்து பாடங்களும், மாணவர்களின் நலனுக்காக தமிழகம் முழுவதும் ஒளிபரப்பப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் kalvitvofficial என்ற யூ டியூப் சேனல் மூலமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளதாகவும் அன்றாடம் டிவிமூலம் ஒளிபரப்பாகும் பாடங்களை உடனே அந்த யூ டியூப் சேனலில் அப்டேட் செய்யப்படுமாம். மேலும், அந்த கல்வித் தொலைக்காட்சியை TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200, TCCL - 200, VK DIGITAL - 55, AKSHAYA CABLE - 17 ஆகிய கேபிள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment