Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 25, 2020

12ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத இயலாத 34000 மாணவர்களுக்கு மறுதேர்வு: அறிவித்தார் முதல்வர்



சென்னை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று நடைபெற்ற 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மார்ச் 24ம் தேதி திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. ஆனால், பல்வேறு காரணங்களால், ஏராளமான மாணவர்கள் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்வை எழுத முடியாமல் போனது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு, மறுதேர்வு நடைபெறும் என்றும், மறுதேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.



அதோடு, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து தேநீர்க்கடைகளையும் மறு உத்தரவு வரும் வரை மூட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே, சென்னையில் தேநீர்க்கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment