Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 22, 2020

இளையோரையும் கொரோனா தாக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



ரோம்; 'கொரோனா வைரஸ், முதியோரை மட்டுமன்றி, இளையோரையும் தாக்கும் ஆபத்து உள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதனம் கெப்ரேசஸ் எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா, நோய் எதிர்ப்பு திறன் குறைந்த முதியோரைத் தான் தாக்கும் என, கருத வேண்டாம்;


திடகாத்திரமாக உள்ள இளையோரையும் தாக்கி, மரணக் குழியில் தள்ளும்; அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கொரோனா தாக்காமல் இருக்க, மது அருந்துதல், புகை பிடித்தலை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை உள்ள குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். சுகாதார வசதிகள் குறைவான நாடுகளில், மக்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்நாடுகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதற்கு, உலக நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment