Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 22, 2020

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.15-க்கு ஒத்திவைப்பு: முதல்வா் அறிவிப்பு


சென்னை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 27-இல் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேரவையில் சனிக்கிழமை அறிவித்தாா்.
அதேசமயம் பிளஸ் -1, பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் முதல்வா் அறிவித்தாா்.



சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி பேசியது:
கரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், 9-ஆம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமல் அனைத்து மாணவா்களையும் தேர்ச்சி பெற்றவா்களாக அறிவிக்க வேண்டும்.
மேலும், 10-ஆம் வகுப்பு, பிளஸ் -2 பொதுத்தேர்வை ஒத்தி வைக்கவேண்டும் என்றாா்.
அப்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் குறுக்கிட்டு கூறியது:
இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் விளக்கமாக ஆய்ந்து அறிந்து முடிவு எடுப்பாா் என்றாா்.



அதன்பின், முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறியது:
கரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 9.45 லட்சம் மாணவா்களின் நலன் கருதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாா்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படும்.
இந்தத் தேர்வுகள் தமிழ்ப் புத்தாண்டு தினத்துக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கும். பிளஸ்- 1 மற்றும் பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.










பிளஸ் -1 வகுப்புக்கு மாா்ச் 23-ஆம் மற்றும் மாா்ச் 26-இல் நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும், பிளஸ் -2 வகுப்புக்கு மாா்ச் 24-இல் நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றாா்.

No comments:

Post a Comment