Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 23, 2020

விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டில் இருந்து மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் - ஆசிரியர் கழகம் கோரிக்கை



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டில் இருந்து மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:




தமிழகம் முழுவதும் வரும் மார்ச், ஏப்ரல் 2020 நடைபெற உள்ள மேல்நிலை முதலாம் மற்றும் 2ம் ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏறத்தாழ 20 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு விடைத்தாள் மையத்திலும் சுமார் 700 ஆசிரியர்கள் இப்பணியில் ஒரே நேரத்தில் கூடுவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட மதிப்பீட்டு பணியை ஆசிரியர்கள் அவர்களின் இல்லங்களிலேயே அமர்ந்து மதிப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.




அவ்வாறு இல்லாத பட்சத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தினந்தோறும் தரமான முக கவசம் மற்றும் சானிடைசர், பேப்பர் உள்பட கிருமி நாசினிகள் பள்ளி கல்வித் துறை சார்பில் வழங்கப்பட வேண்டும்.

நெல்லை, தென்காசி விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பெண் பட்டியல் சரிபார்க்கும் அலுவலராக முதுகலை ஆசிரியர்களை மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment