Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 31, 2020

உடல் வெப்பத்தை தணிக்கும் நெல்லிக்காய் சாறு!



நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.
நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடிக்கும்போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த மலை நெல்லிக்காய் சாறு குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே தினமும் இதனை குடித்து வந்தால் மலசிக்கல் பிரச்சினை சரியாகி விடும்.
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலை போக்குவதற்காக தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.
கோடை காலத்தில் நமது உடலானது எப்போதுமே அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

No comments:

Post a Comment