Breaking

Tuesday, March 31, 2020

ஏப்ரல் 17ம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம் !! அதிரடி அறிவிப்பு



இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த இன்று கடந்த 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனால் தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் தடையின்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை ப்ரீபெய்டு செல்லிடப்பேசி சேவையை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதைப்போல் தற்போது ஏர்டெல் தொலைத் தொடார்பு நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் வசதி இலவசம் என்றும் ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment