தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பாக்கெட் அளவுள்ள இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மருந்துக்காகச் சேர்க்கப்படும் மருந்துப் பொருள்கள் யாவும் விராகநிடை என்ற அளவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிளகு விராகநிடை ஒன்றரை, லவுங்கம் விராகநிடை ஒன்றரை, ஜாதிக்காய் விராகநிடை ஒன்றரை, ஓமம் விராகநிடை ஒன்று, ஜாபத்திரி விராகநிடை ஒன்று, சித்திரமூலம் விராகநிடை ஒன்று, திப்பிலி விராகநிடை ஒன்றரை, கருஞ்சீரகம் விராகநிடை ஒன்று, கோஷ்டம் விராகநிடை ஒன்று, கோரோஜனை விராகநிடை இரண்டு, நாவல் துளிர் விராகநிடை ஒன்று, மாந்துளிர் விராகநிடை ஒன்று, வேப்பங்கொழுந்து விராகநிடை ஒன்று, பூரம் விராகநிடை ஒன்று.
இவைகளை உலர்த்தி யிடித்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து மேற்படி இருவகைகொ....
இதைத் தொடர்ந்து இருக்க வேண்டிய வரிகள், 62 பக்கத்தில் இருக்கின்றன. நமக்குக் கிடைக்கவில்லை.
நூலின் முதல் - தலைப்புப் பக்கத்தில் கைமுறை பாக்கெட் வயித்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவை பூ.சு. துளசிங்கமுதலியாரால் ஏட்டுப் பிரதியும் கைமுறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று,
பூவிருந்தவல்லி பூ.சு.துளசிங்கமுதலியாரது சுந்...ாச அச்சுக்கூடத்திற் ....ப்பிக்கப்பட்டது. 1914 - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூலின் பிரதி யாரிடம் இருக்கிறதெனத் தெரியவில்லை. எனினும், குறிப்பிட்ட இரு பக்கங்கள் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படுகின்றன.
இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்றும் கைமுறை வைத்தியத்தில் சொல்லப்படும் கோரோனவும் ஒன்றுதானா என்பதும் தெரியவில்லை.
அரசு அமைப்புகள் நினைத்தால் எளிதில் இந்த நூலைக் கண்டுபிடித்துவிட இயலும். மேலும், சிறியதொரு முயற்சியின் மூலம் இந்த மருந்தைச் சோதித்துப் பார்த்துவிடவும் முடியும்.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இதையும்கூட முயன்று பார்க்கலாம்தானே!




No comments:
Post a Comment