Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 13, 2020

அனைத்து வங்கிகளையும் இன்று முதல் மூட உத்தரவுஅதிரடி உத்தரவுக்கு காரணம் என்ன?



கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து வரவில்லை என்றும் சமூக விலகலையும் கடைபிடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர் இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி அவர்கள் அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் இதன்படி திருப்பூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வங்கிகளையும் மூட வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 comment:

  1. திருப்பூர் மாவட்டம் என்பது தவறான தகவல் திருப்பத்தூர் மாவட்டம் என்பது தான் உண்மை

    ReplyDelete