Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 13, 2020

ஊரடங்கு நீட்டிப்பால் மேலும் ரூ.1000 நிவாரணம்!





ஊரடங்கு நீட்டிப்பால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மேலும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார், தமிழ்நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கக் தடையில்லை என்று கூறிய முதல்வர், பார்சல்கள்மட்டுமே வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் கட்டடத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரண்டாவது முறையாக ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment