Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 29, 2020

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இயற்கை பானம்:அரசு பரிந்துரை



சென்னை :தமிழக அரசு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையுடன் இணைந்து, 'ஆரோக்கியம்' என்ற, சிறப்பு திட்டத்தை துவக்கியுள்ளது.இத்திட்டத்தில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றி, கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை, அரசு பரிந்துரை செய்து வருகிறது. அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானத்தை, அரசு மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.இயற்கை பானம் நாட்டு நெல்லிக்காய் - அரை துண்டு; துளசி - 20 இலைகள்; இஞ்சி - கால் துண்டு; எலுமிச்சை - கால் துண்டு; மஞ்சள் பவுடர் - கால் ஸ்பூன்; தண்ணீர் - 150 மில்லி, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து,வடிகட்டி பருக வேண்டும்.பெரியவர்கள், 250 மில்லி - சிறியவர்கள், 100 மில்லி, அளவில், ஒரு நாளைக்கு, இரண்டு முறை பருக வேண்டும். சூடான பானம்இஞ்சி - சிறிய துண்டு; துளசி - 10 இலை; மிளகு - கால் ஸ்பூன்; அதிமதுரம் - அரை ஸ்பூன்; மஞ்சள் பவுடர் - கால் ஸ்பூன்; தண்ணீர் - 250 மி.லி., - பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டிபருகவும். பெரியவர்கள், 50 மில்லி, - சிறியவர்கள், 20 மில்லி, அளவில், ஒரு நாளைக்கு இரண்டு முறை பருக வேண்டும்.வேறு நடைமுறை* சிறிதளவு உப்பு கலந்த மிதமான வெந்நீரால், காலை மற்றும் மாலை நேரங்களில், வாய் கொப்பளிக்கவும். முகத்திற்கு ஆவி பிடிப்பது நல்லது.*சூரிய ஒளி குளியல்: தினமும், காலை, 10:00 மணிக்குள்; மாலை, 4:00 மணிக்கு மேல், 15 - 20 நிமிடங்கள், சூரிய ஒளியில் நிற்கவும்.இவ்வாறு, அரசு பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment