
சென்னை: தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மக்களை காக்க தன்நலம் கருதாது பணியாற்றி வரும் அனைத்து தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 18 மாதம் ரத்து செய்தும், ஈட்டிய விடுப்பினை அரசுக்கு ஒப்படைப்பு செய்வதை அடுத்த ஒரு வருடத்திற்கு ரத்து செய்தும் வெளியிட்டுள்ள இரண்டு அரசாணைகளும் நன்றாக இயங்கி வரும் அரசு இயந்திரங்களுக்கு தடைக்கற்கள் போன்ற அறிவிப்பாகும். இன்றைய நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஏற்கும்பட்சத்தில் அரசின் பங்களிப்பாக ரூ.16,000 கோடி கிடைக்கும். அரசுக்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களின் வயிற்றில் அடிப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.



No comments:
Post a Comment