Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 11, 2020

நீட்தேர்வு எழுதுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு !




கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே மாதம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் அந்த தேர்வையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களையும் மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் வினித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது ; நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் தங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் எதுவும் இருந்தால், அதை திருத்தி கொள்ளலாம்.
மேலும் தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தேசிய தேர்வு முகமையின் nta-n-eet.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்குள் கட்டணம் இல்லாமலும், இரவு 11.50 மணிக்குள் கட்டணத்தோடும் திருத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களை nta-n-eet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment