Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 11, 2020

மருத்துவ குணம் நிறைந்த அத்திமரம்



அத்திமரம் மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் ஆரோக்கிய பலன்களை அள்ளி வழங்கும் தன்மை கொண்டன. இந்த பழங்கள் மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.
அத்தி பழங்களில் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க் என பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டால் மூலநோயைக் குணப்படுத்தலாம். அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பவுடராக்கி இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும் மற்றும் இதன் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும்.
அத்திப் பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நார்ச் சத்தும் அதிகமுள்ளதால் உடல்பருமனை குறைக்கிறது .

No comments:

Post a Comment