
செய்முறை :
விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும். இடதுகாலை மடித்து வலது தொடை மீது வைத்து, வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும். இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து கையை முதுகுக்கு பின்புறம் கொண்டு வந்து முதுகை தொடவும். வலது கையை சாதாரணமாக பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்களை பிடிக்க முயற்சிக்கவும். சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை இருக்கவும். பின் கைகளைப் பிரித்து கால்களை பிரித்து அமரவும். மாற்று ஆசனமாக இடது காலை மடித்து, பின் வலது காலை மடித்து முன்புசெய்தது போல் செய்யவும். உங்களது எந்த கால் முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து பயிற்சி செய்யவும்.
பலன்கள் :
பசியில்லாமல் அவதிப்படுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் இருந்தால் பசியிருக்காது. மலச்சிக்கல் நீங்கியவுடன் சரியாகப் பசி எடுக்கும். அஜீரணம் நீங்கும். நுரையீரல், மார்பு, இதயம் பலம் பெறுகின்றது. கை, கால்களில் ஏற்படும் வலி நீங்கும். குடலிறக்கம், விரைவீக்கம் நீங்கும். தூக்கமின்மை, கூன்முதுகு நீங்கும். தலைவலி நீங்கும். மூல வியாதி நீங்கும். மனிதனின் தோள்பட்டைகளில் காணும் ஏற்றம், இறக்கம் நீங்குகின்றது. கணையம் ஒழுங்காக இயங்குகின்றது. அதனால் நீரிழிவு வராது. வந்தாலும் நீங்கும். ரத்த ஓட்டம் சீராக உடலில் நடைபெறும். சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். தோள்பட்டை வலி நீங்கும்.



No comments:
Post a Comment