Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 11, 2020

தலை வலி நீக்கும் தலைக் கவசம் யோகா



தலை வலி நீக்கும் தலைக் கவசம் யோகா – உத்தான பாதாசனம்
செய்முறை:
விரிப்பில் நேராக படுக்கவும்.
இரு கால்களை சேர்க்கவும்.
கைகளை விரல்கள் குப்புறப்படுமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைக்கவும்.
மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்தவும்.
மூச்சை அடக்கி பத்து வினாடிகள் இருக்கவும்.
பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும்.
ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யவும்.
பலன்கள்:
ஜீரண உறுப்புக்கள் இருக்கம் பெற்று நன்கு வேலை செய்யும்.
உச்சி முதல் பாதம் வரை நாடி நரம்புகள் சிறப்பாக இயங்கும்.
வாயு தொந்தரவு நீங்கும்.
அஜீரண கோளாறு நீங்கும்.
மலச்சிக்கல், தலைவலி நீங்கும்.
அடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும் சிறுநீர்ப்பை தூண்டப்பட்டு தொந்தி இருந்தால் குறையும். இளம் மாணாக்கர்களுக்கு இது நல்லதொரு பயிற்சி. நினைவாற்றல் தூண்டப்படும்.

No comments:

Post a Comment