Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, April 21, 2020

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தர்பூசணி..!


உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தர்பூசணி எவ்வாறு உதவும்?
உயர் ரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட தர்பூசணி ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான விருந்தாக இருக்கும். இதில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. இது வீக்கத்தைக் குறைத்து ஆக்ஸிடெண்ட் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தர்பூசணி ஒரு குக்குர்பிடேசி குடும்பத்தைச் சொந்தமாகக் கொண்டது. இதில் 92% அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது மற்றும் நல்ல அளவு லைகோபீன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், அமினோ அமிலம், ஆக்ஸிடெண்ட்ஸ் மற்றும் குறைவான சோடியம் மற்றும் கலோரிகள் கொண்டது (ஒரு சர்விங் 40 கிலோகலோரி).
"தர்பூசணியில் எல் சிட்ரூலைன் என்ற அமினோ அமிலமும் நிறைந்துள்ளது, இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் விளைவாகக் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இருதய ஆரோக்கியம் மேம்படும். நைட்ரிக் ஆக்சைடு ஒரு வாயுவை உற்பத்தி செய்ய சிட்ரூலைன் உதவுகிறது, இது ரத்த நாளங்களைத் தளர்த்துகிறது மற்றும் தமனிகளில் நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் தர்பூசணியின் லைகோபீன் உள்ளடக்கம் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
எப்படி மற்றும் எப்போது தர்பூசணியை சாப்பிட வேண்டும்?
தர்பூசணி இயற்கையில் சற்று அமிலத்தன்மை கொண்டது, எனவே வெறும் வயிற்றில் சாப்பிடுவதையும், நள்ளிரவில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவு சாப்பிடுவது சிறந்தது.

No comments:

Post a Comment