Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 21, 2020

பெருங்குடல் புற்றுநோயைக் குறைக்க அல்லியம் காய்கறிகள்!



அன்றாடம் உணவில் 50 கிராம் அல்லியம் காய்கறிகளான (allium vegetables) வெங்காயம், பூண்டு, லீக்ஸ் போன்வற்றை சேர்த்துக் கொள்வதால் பெருங்குடல் புற்றுநோயைக் குறைக்க முடியும். ​
சீனாவின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஃபர்ஸ்ட் மருத்துவமனையிலிருந்து ஸி கி , அதிகளவு அல்லியம் காய்கறிகளை சேர்க்கும் போது அது உடலுக்கு பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளர். பொதுவாக, தற்போதைய கண்டு பிடிப்பு பெருங்குடல் புற்றுநோயினை சரியான வாழ்க்கை முறையின் மூலம் தடுக்க முடியும்.
மேலும் இது குறித்து ஆராய்சிகளும் நடை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் 833 புற்றுநோயாளிகள் பங்கேற்றனர். வாழ்வியல் முறை மற்றும் அவர்களின் உணவுப் பட்டியல் தகவல்கள் ஆகியவற்றை நேர்காணல் மூலமாக முறையாக கேள்வித்தாளை தயாரித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
பூண்டு சாப்பிடுவதால் கேன்சர் அபாய குறைவுக்கும் என்று நேரடியான தொடர்பு எதும் நிரூபிக்கப் படவில்லை. இந்த ஆய்வின் படி ஒவ்வொரு ஆண்டும் 16 கிலோ அல்லியம் காய்கறிகளை எடுத்துக் கொண்டாலோ அல்லது அன்றாடம் 50 கிராம் எடுத்துக் கொண்டால் ஆரோக்கிய நலன்களைப் பெற முடியும்.
புற்று நோயின் ஆபத்தைக் குறைக்கக் கூடிய ஊட்டச்சத்துகள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் கேன்சருக்கான அபாயத்தை குறைக்கிறது. குறிப்பாக உணவுக் குடலில் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

No comments:

Post a Comment