Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 21, 2020

Whats app - ன் புதிய அப்டேட் விரைவில் !! என்ன தெரியுமா ?



2009 ம் ஆண்டு பிரையன் ஆக்டன் , ஜேன் கோம் ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் Yahoo நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்து கொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.
2015 ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் போது, இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்படுத்தியிருந்தனர். வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது. வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிடும்.
தற்போது வாட்ஸ் ஆப் மூலம் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது சமூக வலைத்தளங்களில் தான் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. பலருக்கும் தற்போது பொழுதுபோக்காக இருப்பது முகநூல், வாட்ஸாப் தான்.
கொரோனாவால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள், அலுவலக ஆலோசனை மற்றும் அலுவலகம் சார்ந்த விபரங்களை வீடியோ கான்பிரன்சிங் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில் வாட்ஸ் ஆப் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரை வாட்ஸ் ஆப் வீடியோ காலில் 4 பேர் மட்டுமே இணைந்து பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment