
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் ஆசிரியர்கள் தரப்பில் தேர்வை ரத்து செய்ய வேண்டாம், ஜூன் மாதம் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளனர். மேலும், மொழி பாடங்களை மட்டும் விட்டு விட்டு, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாம், கேள்விகளை, பாடங்களை குறைத்தோ தேர்வு நடத்தலாம்.
அதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை பற்றி பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், ஊரடங்கு முடிந்த பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
தேர்வு குறித்த அட்டவணை, தேர்வு நடத்தப்படும் நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், 29 பாடங்களுக்கான 10, 12ம் வகுப்பு தேர்வை வரும் ஜுலையில் நடத்த சி.பி.எஸ்.இ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment