Breaking

Wednesday, May 27, 2020

தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்: தமிழக அரசு



கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 675 மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள் தினந்தோறும் போராடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் 675 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள் அனைவரும் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் இதற்காக அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கவும் முடிவு செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சுகாதாரத்துறை, தேசிய நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மருத்துவர்களை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
நியமனம் செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேர சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் தேவையேற்பட்டால், 3 மாத கால பணி, மேலும் நீட்டிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment