Subscribe Us

Wednesday, May 27, 2020

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் புகார் தெரிவிக்க புதிய செல்போன் செயலி!


அரசு பணிகளுக்காக தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் தங்களின் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க புதிய செல்போன் செயலியை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகளுக்காக பல்வேறு நிலை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளை எழுதவிரும்பும் தேர்வர்கள் தங்களின் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க புதிய செல்போன் செயலியை உருவாக்கம் தேர்வாணையம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அனைத்து வகை செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யும் வகையில் செல்போன் செயலியை உருவாக்க, தகுதியுடைய நிறுவனங்கள் ஜூன் 22ஆம் தேதிக்குள், தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தது. மேலும் செல்போன் செயலிக்கான ஒப்பந்தம் கோர விரும்பும் நிறுவனங்கள் அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை www.tenders.tn.gov.in அல்லது www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed