Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 3, 2020

கரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்த கல்வி துறை உத்தரவு



பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ் குமார், அனைத்து மாவட்டஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற பல்வேறு ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ​இதையடுத்து தற்போதைய ஊரடங்கு சூழலில், தன்னார்வ சேவை புரியத் தயாராக உள்ள 50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கரோனாதடுப்புப் பணியில் பயன்படுத்திக் கொள்ளலாம். ​
அதன்படி, ரேஷன் பொருட்கள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல், பொது இடங்களில் சமூகஇடைவெளியைக் கண்காணித்தல், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை உருவாக்குதல், பொது கணக்கெடுப்பு உட்பட மருத்துவம் சாராத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தலாம்.
விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்கள் பட்டியலைத் தயாரித்து மாவட்ட ஆட்சியர்களிடம், அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment