Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 2, 2020

சிவில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! அழைக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம்!



நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் சிவில் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கட்டிட பொறியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி : சிவில் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 854
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 354
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லது www.nlcindia.com எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment