
கட்டுப்பாட்டு மண்டல தேர்வு மையங்களில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை
தமிழகத்தில் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் அமைக்கப்படும் பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் முழு பாதுகாப்பு கவசம் உடையுடன் பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தனியாக தேர்வு மையம் அங்கேயே அமைக்கப்படும் அந்த தேர்வு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு பாதுகாப்பு கவச உடை வழங்கப்படவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் வெளிமாநிலத்தில் இருந்தால் அவர்களுக்குத் தேவையான பயண உரிமைச் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு வெளிமாநிலத்தில் இருந்து வரும் மாணவர்களுடன் ஒருவர் வருவதற்கு அனுமதி வழங்கப்படும் அவர்களுக்கு E- பாஸ் வழங்கப்படும். ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் கல்லூரிகளிலும் பயில்ம் வெளியூர் மாணவர்கள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. ஏதாவது சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படும். தேவைப்பட்டால் மறு த் தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மலைப்பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு குறித்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது என்றார்.



No comments:
Post a Comment