Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 13, 2020

அரசு அலுவலகங்களில் இன்று கிருமி நாசினி தெளிப்பு


சென்னை; கிருமி நாசினி தெளிப்பதற்காக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன. ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதால், சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நோய் பரவல் ஏற்படுவதை தடுக்க, இரண்டாவது சனிக்கிழமை, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விட வேண்டும். அன்றும், அதற்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும், அரசு அலுவலகங்களை, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். அலுவலக வளாகத்தையும் துாய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. அதை ஏற்று, தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, இன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், அரசு அலுவலகங்கள், கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட உள்ளன. சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, அனைத்து அலுவலகங்களுக்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலக கட்டடம் முழுவதும், இரண்டு நாட்களுக்கு, கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பொதுத்துறை செயலர், செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment