அலைபேசியின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் குறைந்தது ஒருவாரம் உயிர் வாழும். அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் ஆபத்தில் இருந்து தப்பலாம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் காற்றில் கலந்து, நம்மை சுற்றியுள்ள பொருட்களில் படர்ந்திருக்கலாம். இந்த பொருட்களின் தன்மை, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதத்திற்கு ஏற்ப, வைரஸ் உயிர் வாழும் கால அளவு மாறுபடுகிறது.இதில் அலைபேசி ஸ்கிரீனில் அதிகபட்சம் ஒருவாரம் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழும் என்கின்றனர். அடுத்து பருத்தி துணிகள், மரத்தினால் ஆன பொருட்ககளில் அதிக காலம் வாழும். இவற்றில் வைரஸ் கலந்த நீர்த்துளிகள் பட்டால் மிக மெதுவாகத்தான் ஆவியாகும். இதுபோன்ற பொருட்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அலைபேசியில் சில நேரங்களில் அதிக வெப்பம் இருப்பதால் வைரஸ் அழிந்து விடும் என்றாலும், காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் அளவுக்கு ஏற்ப பல நாட்கள் உயிர் வாழும். 'ஸ்பெஷல் கோட்டிங்'பொதுவாக அலைபேசி ஸ்கிரீன்கள், தண்ணீர் ஒட்டாமல் இருக்கும் வகையில் 'ஹைட்ரோபோபிக்' பூசப்பட்டிருக்கும். இது, நீர்த்துளிகள் ஆவியாதல் விகிதத்தை குறைக்கிறது.
இதனால் மேற்பரப்பில் உள்ள நீர்த்துளிகள், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுதல் அபாயத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது. இதை மும்பை, 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' பேராசிரியர் ரஜ்னீஸ் பரத்வாஜ் உறுதி செய்துள்ளார். சுத்தம் செய்யுங்கஇதனால் அலைபேசியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உதவி பேராசிரியர் அமித் அகர்வால் கூறுகையில்,' 'அலைபேசியில் அழியாமல் தாக்குப்பிடிக்கும் வைரஸ் காரணமாக, 'இன்புயூயன்சா ஏ' போன்ற பிற நோய்கள் பரவ காரணமாக அமையும்,'' என்கிறார்.இதனால் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினி கொண்டு தினமும் குறைந்தது இருமுறை அலைபேசி 'ஸ்கிரீனை' சுத்தம் செய்ய வேண்டும்.
இது ஒன்று தான் அலைபேசியில் இருக்கும் வைரசை கொல்ல சிறந்த வழி. ஆப்பிள் நிறுவனம் 'மைக்ரோ பைபர்' துணி அல்லது சோப் கலந்த நீரால் சுத்தம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. கவனம் தேவைசவுத்தாம்ப்டன் பேராசிரியர் வில்லியம் கீவில் கூறுகையில்,''நீங்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யலாம். அடுத்து அலைபேசி 'ஸ்கிரீனை' தொட்டு, பிறகு முகத்தை தொடும் பட்சத்தில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment