நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐந்து கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கள் அனைத்து விதமான தொழில்களை முடங்கியது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளது.
இதனால் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் திறக்கப்படும் எனவும் பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது தெரிந்து கொள்ள 33 கோடி மாணவர்களும் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இணையவழி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்தக்கூறி பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது. அரசாணை விதிகளை மீறி கல்விக்கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை என தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியில் பாடம் நடத்துவதாக புகார்கள் வருகின்றன. கல்வி கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் வந்துள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment