Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 18, 2020

விடுபட்ட தேர்வை எழுதும் +2 மாணவர்களுக்கு ஓரிரு நாட்களில் ரிசல்ட் : அமைச்சர் செங்கோட்டையன்


கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதாவது அவர்கள் மீண்டும் அந்த தேர்வை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த தேர்வை எழுதினால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

ஆனால் மார்ச் 24 ஆம் தேதி நடந்த தேர்வை எழுதாத 32 ஆயிரம் மாணவர்களுள் 700 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அந்த 700 மாணவர்களுக்கு மட்டும் வரும் ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதனிடையே எல்லா தேர்வுகளையும் எழுதி முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியாகின. இந்த நிலையில், கொரோனாவால் விடுபட்ட தேர்வை எழுதும் +2 மாணவர்களுக்கு ஓரிரு நாட்களில் ரிசல்ட் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment