Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 18, 2020

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த் தொற்றை தடுக்கும் அற்புத மருத்துவம்..!


பொதுவாக ஒருவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் திரும்பத் திரும்ப வருகிறது என்றால், அவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என அர்த்தம்.பலவீனமான உடல் அமைப்பு, மன அழுத்தம், ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய சூழல்,தூக்கமின்மை ,சர்க்கரை மற்றும் புற்றுநோய் பாதிப்பு போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்கள் ஆகும்.
இன்று நாம் பார்க்கப் போவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சுவாசப் பிரச்சனை, நெஞ்சு சளி, நீண்ட நாள் தீராமல் இருந்த நாள் பட்ட சளி, அத்துடன் நுரையீரல் சளிக்கு போன்றவற்றிற்கு ஒரே தீர்வாகும் மருந்து பற்றித் தான். தேவையான பொருட்களை பார்க்கலாம்: வெற்றிலை , 20 துளசி இலைகள், சிறிய துண்டு இஞ்சி, திப்பிலி ஒன்று, மிளகு 20, மஞ்சள் சிறிதளவு இவ்வளவு தான்.

இதனை வைத்து மருந்து செய்யும் முறையை பார்க்கலாம். முதலில் இஞ்சி, மிளகு, திப்பிலி, போன்றவற்றை ஒரு உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் துளசி இலைகளை போடுங்கள். அதனுடன் இரண்டு வெற்றிலையை எடுத்து சின்ன சின்னனாக வெட்டி போடுங்கள், இதனுடன் இடித்து வைத்திருக்கும் மிளகு,
திப்பிலி, இஞ்சி மிக்ஸை சேர்க்கவும், அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஒரு கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து விடுங்கள். இது நன்றாக கொதித்து ஒரு கப் நீர் அரை கப் ஆனதும் இறக்கி விடுங்கள். இந்த பானத்தில் காலையில் கால் கப். மாலையில் கால் கப் என 3 நாட்கள் குடித்தாலே போதும், மேல் குறிப்பிட்ட அத்தனை நோயும் ஓடியே போய்விடும்..!!

No comments:

Post a Comment