Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 14, 2020

சுயிங்கம் மெல்லுவதால் உடலுக்குள் ஏற்படும் நன்மைகள்


சுயிங்கம் உடலுக்கு சில நல்ல விஷயங்களை செய்கிறது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு இதனை மெல்லும்போது உமிழ்நீர் பெருமளவு சுரக்கும். அது உணவை செரிமானம் செய்ய துணைபுரியும். உமிழ் நீர் அதிக அளவில் இரைப்பைக்குள் செல்லும்போது, அங்கே சுரக்கும் தேவையற்ற அமிலங்களின் அளவு கட்டுப்படுத்தப்படும். இது இரைப்பைக்கும், ஜீரணத்திற்கும் ஏற்ற செயலாகும்.

நமது மூளையில் நினைவாற்றல் மற்றும் விழிப்புணர்வுக்கு தேவையான பகுதி எப்போதும் தூண்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். சுயிங்கத்தை அசைபோடுவது அவைகளின் தூண்டுதலுக்கு ஓரளவு காரணமாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டறிந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கும்போதும், விளையாட்டு வீரர்கள் களத்தில் நிற்கும்போதும் பதற்றத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் உள்ளாகிவிடுவார்கள்.

அத்தகைய நேரங்களில் அவர்கள் சுயிங்கத்தை அசைபோட்டால் மனம் அமைதியாகும். சுயிங்கம் மென்றால் பல் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்கள் வெளியேற்றப்படும். தாடை மற்றும் ஈறுகளுக்கு இது ரத்த ஓட்டம் தரும் பயிற்சியாகவும் அமையும்.

No comments:

Post a Comment