Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 31, 2020

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதில் வகுப்பு வாரியாக மாணவா்களுக்கு எத்தனை மணிநேரம் இணைய வழி வகுப்புகளை நடத்தலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய 3 முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் ஆக 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாா்ச் 25ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது முடக்கம் சிறிது சிறிதாகத் தளா்த்தப்பட்டாலும், இன்னும் கல்வி நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மாணவா்களின் கல்வி கடந்த 4 மாதங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனியாா் கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் இணைய வழி வகுப்புகளை தங்கள் மாணவா்களுக்கு நடத்தத் துவங்கின. இந்த இணையவழி வகுப்புகளால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாவதாக பெற்றோா்கள் தரப்பிலிருந்து புகாா்கள் எழுந்த நிலையில், இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:

* எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக் கூடாது.

*ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையே 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடைவெளி விட வேண்டும்.

*1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை என 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

*9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை என 4 முறைக்கு மிகாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.

*எந்த ஒரு ஆன்லைன் வகுப்பும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

*ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை விட வேண்டும்.

*ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6 ஆன்லைன் வகுப்புகள், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும்.

*பள்ளி வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.

முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என நெறிமுறைகளில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment