Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 12, 2020

உடல் பருமனுக்கான முக்கிய காரணங்கள்


நாம் பருமனாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் பருமனாகிறோமே என நாம் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம்.

முதலில் நாம் சாப்பிடும் உணவுகளை மென்று முழுங்காமல், அவசர அவசரமாக உணவை முழுங்குவதால் நம் ஜீரணத்தன்மை பாதிக்கின்றது. அதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் நம் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகிறது. அதனால்தான் அந்த காலத்தில் 'நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று சொன்னார்கள். எனவே நாம் சாப்பிடும் உணவுகளை மென்று சாப்பிட வேண்டும்.

முடிந்த அளவுக்கு நாம் சாப்பாட்டை ஹோட்டல், கையேந்தி பவன், துரித உணவகம் போன்ற இடங்களில் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. நாம் சாப்பிட நேரமில்லை என்று சொல்லாமல், வீட்டிலேயே நேரத்தைக் குறைக்கும் வழியில் எளிய உணவுகளை செய்ய பழகிக் கொள்ளலாம். இவை நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

மனஅழுத்தத்தில் இருக்கும்போது மற்றும் கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிகவும் தவறாகும். இது உடல் பருமனை மட்டுமல்லாது ஜீரண மண்டலத்தையும் பாதித்து பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

மேலும் சிலருக்கு மனஅழுத்தம் இருக்கும்போது சாப்பிட தோன்றும். அதுவும் தவறு. இருப்பினும் அந்த சமயத்தில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, தண்ணீரை அருந்தலாம்.

ஒரே எண்ணெயை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, ஆவியில் வேக வைக்காமல், ருசிக்காக பொரித்து சாப்பிடுவது, காய்கறிகளுக்கு பதிலாக கார்போ ஹைட்ரேட் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது, ஒரே சத்துக்கள் கொண்ட உணவுகளையே திரும்ப திரும்ப உண்ணுவது போன்றவைகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது.

No comments:

Post a Comment