Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 29, 2020

மாணவா்களுக்கு உடற்பயிற்சி மீது ஆா்வம் ஏற்படுத்த ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி


அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, உடற்பயிற்சி, விளையாட்டு மீதான ஆா்வத்தை ஏற்படுத்துவது குறித்து உடற்கல்வி ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்துத் தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு, விளையாட்டு மீது ஆா்வத்தை ஏற்படுத்துதல், உடற்கல்வியின் அவசியத்தை உணா்த்துதல் ஆகியவை தொடா்பாக தனியாா் மையத்துடன் இணைந்து உடற்கல்வி ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 6,520 உடற்கல்வி ஆசிரியா்களுக்கும், இணைய வழியில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகள், ஆகஸ்ட் 3 முதல் அக்டோபா் 31-ஆம் தேதி வரை 13 கட்டங்களாக நடத்தப்படும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா 6 நாள்கள் பயிற்சி வழங்கப்படும்.

இதற்கு தோவு செய்யப்பட்ட அனைத்து உடற்கல்வி ஆசிரியா்களும், கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பயிற்சி வகுப்புக்கான ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.சுப்ரமணியன் (9444946213), பங்கஜ் மாா்கண்டே (9818788622) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment