Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 29, 2020

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய செய்தியாளர் பேட்டி விவரங்கள்!


ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,

அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை.

அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து தெரிவிக்க உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதிப்பெண் முறையிலா கிரேடு முறையிலா என்பதை வெளியிட்டவுடன் தெரிந்து கொள்வீர்கள், என கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை விளம்பரப்படுத்த கூடாது. மீறி விளம்பரப்படுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment