Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 11, 2020

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள்...

நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருந்தால்தான் நோய்களை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமாக இருக்க முடியும். அத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் அவசியமானது.

குழந்தைகளுக்கு இன்னும் கூடுதலாகவே தேவைப்படுகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளைக் குழந்தைகளுக்கு அன்றாடம் தர வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். ஒவ்வாமை, புற்றுநோய் தாக்கம், கிருமித் தாக்குதல், இதயம் மற்றும் கல்லீரல் நோய்கள் ஆகியவைத் தடுக்கப்படும். மூளையின் செயல் திறன் அதிகரித்துக் காணப்படும்.

குழந்தைகளை சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் காண்பிக்க விட்டமின் டி3 சத்து கிடைக்கும். மழலைகளை சிறிது நேரம் விளையாட விடலாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் ஆகியவற்றிலிருந்து, விட்டமின் டி3 குழந்தைகளைக் காக்கும். பல் வளர்ச்சிக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் உதவும்.

குழந்தையின் 6 வயது வரை ஒரு நாளைக்கு 250 மி.கி. விட்டமின் சி தேவைப்படுகிறது. சத்தான உணவுகளிலிருந்து விட்டமின் சி சத்தைப் பெறலாம். கைக்குழந்தைகளுக்கு, தாய் சத்தான உணவு உண்பதால் தாய்ப்பால் மூலம் சத்து கிடைக்கும்.

விட்டமின் இ சத்து நிரம்பியது. ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சிக்கு உதவும். மூளை வளர்ச்சி மேம்படும். நல்ல கொழுப்பு உடலில் சேரும். ஆன்டிஆக்ஸ்டன்ட் நிறைந்தது.

கேரட், புரோக்கோலி, உருளை, பீட்ரூட், பீன்ஸ், அவரை, பூசணி, பரங்கிக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற பல்வேறு காய்கறிகளைத் தினம் ஒரு வேளை உணவாகக் கொடுத்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தயிர், யோகர்ட், மோர் போன்றவற்றில் உள்ளன. இவற்றைக் குழந்தைகளுக்கு போதுமான அளவில் தருவதால் நல்ல பாக்டீரியா கிடைக்கும். வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிக்கும்.

No comments:

Post a Comment