Breaking

Saturday, July 11, 2020

கண்பார்வை குறைபாடு, சர்க்கரை நோய்க்கு, தாய்பால் சுரக்க பயன்படும் பாலக்கீரை



எளிதில் ஜீரணமாகும் கீரைகளில் ஒன்று பாலக்கீரை.

இதில் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளது. குளிர்ச்சி தரும் இந்த பாலக்கீரை, நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.

இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.

இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.

ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.

இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம்,பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரை ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும். பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப் படுகிறது.

இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.

இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஆகவே நோயில்லா பேரின்ப வாழ்வு வாழ, நமது நாட்டு மூலிகை வளங்களை நன்கு பயன் படுத்தி ஆங்கில மருந்துகளை அரவே தவிர்த்து, உணவே மருந்தாக உண்டு என்றென்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்...!

நோய் வரும் முன் காக்காப்பது சிறப்பு வந்த பின் பாக்கலாம் என்றால் அது மருத்துவருக்கு சிறப்பு...

எனவே "உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலே" அன்புடன் உங்கள் சங்கரமூர்த்தி.. 7373141119

No comments:

Post a Comment