Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 22, 2020

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!.




அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும் இது வாதம் பித்தம் கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நம் முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர்.

தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர் உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. இந்த நெல்லிக்கனி களிடம் கடுக்காயை போலவே பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி என்பது இதில் கருநெல்லி கிடைக்காதது மற்றவை கடைகளில் கிடைக்கும்.

ஆறு சுவைகளில் இனிப்பு புளிப்பு கைப்பு துவர்ப்பு உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும் புளிப்பு கைப்பு கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.

உயிர் சத்துக்களான ஏ பி சி என்ற மூன்று அடங்கியுள்ளன சாத்துக்குடி சாறில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை பெற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை இதற்கு 4 சாத்துக்குடி சாறோ 8 அவுன்ஸ் தக்காளி சாப்பிட வேண்டும் ஆனால் இந்த 50 கிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

ஜீரணக்கோளாறு பித்த மயக்கம் காமாலை கண்நோய் இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும் கட்டிகள் பழுக்கும் போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலர வைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும் புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள் மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும் புத்திக்கூர்மையை ஏற்படுத்தும் குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும் காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது.பற்களில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து நெல்லி இலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினம் ஒரு முறைக்கு மூன்று முறை உலர்ந்த நெல்லிக்காயை நின்று அந்த சாறை மட்டும் எழுதினால் போதும் நெல்லிக்காயில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வாயில் உள்ள துர்நாற்றம் அகல அகற்றி வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் இருமல் சளி போன்றவற்றை எதிர்த்து உடல் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

நெல்லிக்காயில் பல அதிசய மருத்துவ குணங்களை கொண்டது நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக வைத்துக்கொள்ளும் உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது சித்த மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு முக்கிய இடமுண்டு நெல்லிக்காயில் வைட்டமின் சி வேறு எந்த வகை காய் மற்றும் பழங்கள் இல்லாத அளவுக்கு 600 மில்லி கிராம் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

No comments:

Post a Comment