Subscribe Us

Saturday, August 22, 2020

EPASS - "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி!



மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் கூடாது என்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் எழுதிய கடிதத்தில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்படி, மாநிலங்கள் இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது. மேலும் பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ பாஸ் போன்றவை கூடாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசு என்ன அறிவிப்பு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed