Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 21, 2020

பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் மாணவர் சேர்க்கை சி.இ.ஓ., எச்சரிக்கை

 ''அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது'' என சி.இ.ஓ., சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.அவர் கூறியதாவது:

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 1, 6, 9 ம் வகுப்பு மாணவர் சேர்க்கை எவ்வித பிரச்னையின்றி உரிய சமூக இடைவெளியுடன் நடக்கிறது. புத்தகம், நோட்டு, பேக் உள்ளிட்டவை நுாறு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. 

சேர்க்கையின்போது மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் தனித்தனி அறைகளில் சேர்க்கை நடத்த வேண்டும்.பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி உட்பட நோய்த் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். 

முதல் வகுப்பில் மாணவருக்கு பிறப்பு சான்று இல்லாவிட்டால் பெற்றோரின் உறுதி சான்று பெற்று சேர்க்க வேண்டும். சேர்க்கை மறுக்கக்கூடாது. 

அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் பகுதிநேர ஆசிரியரை மட்டும் வைத்து சேர்க்கை நடத்தக்கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment