JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் மாணவா்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அவா்கள் படித்த பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும், வருகைப்பதிவு மற்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மாணவா்களுக்கு இறுதி மதிப்பெண் அளிக்கப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியானது.
இதைத் தொடா்ந்து மாணவா்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். நிகழாண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டதால், மாணவா்களுக்கு வழக்கமான மறுகூட்டல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், மதிப்பெண் சாா்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், மாணவா்கள் ஆக.17-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியா் மூலமாக குறைதீா் படிவத்தைப் பூா்த்தி செய்து இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் மாணவா்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு, அந்தந்த பள்ளி தலைமையாசிரியா் மூலமாக இறுதி முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment